சினிமா

என்னோட குட் மார்னிங் இப்படித்தான்.. செம எனர்ஜியோடு சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

என்னோட குட் மார்னிங் இப்படித்தான்.. செம எனர்ஜியோடு சாக்லேட் பாய் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹரிஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து அவர் பொறியாளன், வில் அம்பு என பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் மூலம் ஹரிஷ் கல்யாண் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை

பின்னர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் வந்த நிலையில், இவர் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருந்தார். 

மேலும் ஹரிஷ் கல்யாண் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஓ மணப்பெண்ணே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ஹரிஷ் கல்யாண் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ளக்கூடியவர். இந்த நிலையில் அவர், ஒர்க் அவுட் செய்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய குட் மார்னிங் இப்படித்தான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement