வாவ்! பிரியா பவானிசங்கருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகன்! வைரலாகும் புகைப்படம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

வாவ்! பிரியா பவானிசங்கருக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் நாயகன்! வைரலாகும் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா பவானி சங்கர்.  சின்னத்திரையில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா பின்னர்  வெள்ளித்திரைக்கு தாவினார்.அதனை தொடர்ந்து அவர் மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம்,  எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பின்னர் அவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இந்தியன் 2 , மாபியா, களத்தில் சந்திப்போம்,  கசட தபற என அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிசியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற பெல்லி சூப்புலு என்ற படம் தமிழ் ரீமேக்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாள் என்பதால்  பட குழுவினர் அனைவரும் சர்ப்ரைஸாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo