பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
பிக்பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்தது எப்படி? ஹரிஷ் கல்யாண் பேட்டி

ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் பிரபலம் ரைசா இணைந்து நடித்து வெளியாகியுள்ள 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படக்குழு அளித்த சிறப்பு பேட்டியின் போது, நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
பிக்பாஸ் முடித்து வெளியே வந்த பிறகு நானும், ரைசாவும் ஒரு செல்ஃபி எடுத்தோம். அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகியது. எங்கள் இருவரையும் சேர்ந்து `ஹரைசா' என்று ட்ரெண்டாக்கினர். அதுபற்றி நாங்கள் பேசினோம். அப்போது தான் ரசிகர்கள் எங்களை திரையில் சேர்ந்து பார்க்க விரும்புகின்றனர் என்பது புரிந்தது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க காரணம்.
பியார் பிரேமா காதல் படத்தின் தலைப்புக்கு சிம்பு தான் காரணம். அவரது வரிகள் என்பதால், அவரிடம் படத்தின் தலைப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர், என்னிடம் இருந்து என் சம்பந்தமாக உனக்கு ஏதாவது உதவும்படியாக இருந்தால், எனக்கு சந்தோஷம் தான் என்றார். சிம்பு தான் என் தலைவர். அரசியலுக்கு வர அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கிறார். பிரச்சனை வந்தால்தான் தோள்கொடுக்க வேண்டும் என்று அவர் நினைக்க மாட்டார். எந்த நேரத்திலும் வருவார். நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர். அதை தான் செய்யவும் விரும்புவார்.