அடடே.! குடும்ப குத்துவிளக்காக மாறிய ஹன்சிகாவின் கியூட் போட்டோ சூட்.!?hansika-motwani-gorgeous-red-dress-photoshoot-viral-at

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். தமிழ் திரைத்துறையில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹன்சிகா தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.

Hansika

தமிழில் முதன் முதலில் 2011 ஆம் வருடம் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

மேலும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, மாடலிங் மற்றும் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஜய் சந்தர் என்ற இயக்குனரின் இயக்கத்தில் கார்டியன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Hansika

இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வரும் ஹன்சிகா மோத்வானி, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக மாறிட்டிங்களே என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.