சினிமா

கொரோனா ஊரடங்குக்கு நடுவே பிகினி புகைப்படத்தை வெளியிட்டு புலம்பும் ஹன்ஷிகா.! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Hansika latest bikini photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஹன்ஷிகா. தனுஷுக்கு ஜோடியாக மாப்பிளை என்ற திரைப்படம் மூலம் தமிழ் நாயகியாக அறிமுகமான இவர் விஜய், சூர்யா, சிவகார்திகேயன், ஜெயம்ரவி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

கடைசியாக குலேபகாவாலி படத்திற்கு பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார் ஹன்சிகா. தற்போது மஹா என்ற ஒருபடம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்நிலையில், சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சமீபத்தில் Youtube சேனல் ஒன்றை தொண்டாகியுள்ளார் ஹன்ஷிகா.

இதுஒருபுரம் இருக்க கடந்த சில மாதங்களுக்கு முன் மாலத்தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் ஹன்சிகா. தற்போது கொரோனா காரணமாக வீட்டிலையே முடங்கியுள்ளநிலையில், கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது, எனது மனம் இன்னும் மாலதீவு கடற்கரையிலையே இருப்பதாக அங்கு எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஹன்சிகா.

ஹன்சிகா மாலத்தீவு கடற்கரையில் இருக்கையில் அவரது சில அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது பிகினி புகைப்படத்தை தானே வெளியிட்டுள்ளார் ஹன்ஷிகா.


Advertisement