இயக்குனர் அட்லியை கலாய்த்து ஜிவி பிரகாஷின் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள்.! கடுப்பான அட்லி..Gv prakash mocking director atlee in his movie

மாலி அண்ட் மான்வி நிறுவனத் தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கும் திரைப்படம் "அடியே". இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.

atlee

இயக்குனர் வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். அல்டெர்நெட் ரியாலிட்டி கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், முழுக்க முழுக்க சயின்ஸ் பிக்ஷன் காமெடி படமாக வந்துள்ளது.

இப்படத்தில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. ஹூண்டாய் பிரஷ், பக்கார்டி பேஸ்ட், கோல்ட் பிளேக் டெட்டால் என்று பொருட்களுக்கு பெயர் வைத்துள்ளார் இயக்குனர். பார்முலா1 ரேசர் அஜித், கால்பந்து வீரர் சச்சின், நடிகர் ரொனால்டோ- ஷங்கர் இணைந்து படம் எடுப்பது என்று முழுக்க கற்பனை உலகத்தில் எடுத்திருக்கிறார்.

atlee

இதில் இயக்குனர் அட்லீயையும் விட்டுவைக்கவில்லை. அவர் பெயரை டட்லீ என்று மாற்றி, அவர் இயக்கிய படங்காளாக மௌன ராகம், சத்ரியன், மெர்சல் ஆகியவற்றை காட்டுகின்றனர். அட்லீ பிற தமிழ் படங்களை காப்பியடிக்கிறார் என்று அவர் மேல் விமர்சனம் இருக்கிறது. இந்நிலையில், இக்காட்சிகள் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.