சினிமா

ரொம்ப சிம்பிளா, ஹாயாக பைக்கில் சென்ற ஜிவி பிரகாஷ்! அதுவும் யாருடன் பார்த்தீர்களா!! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைக்கும் திரைப்படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருகின்றன. மேலும் இவரது பாடலுகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதுமட்டுமின்றி ஹீரோவாக களமிறங்கிய அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

அண்மை காலமாக அவர் நல்ல கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து வருகிறார். மேலும் ஜிவி பிரகாஷ் கைவசம் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், 4 ஜி, ஜெயில், காதலிக்க நேரமில்லை, காதலியை தேடி நித்யானந்தா, பேச்சிலர் என கிட்டத்தட்ட 11 திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட் திரைப்படமும் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இவ்வாறு தொடர்ந்து பாடல், நடிப்பு என செம பிஸியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் கலக்கப்போவது யாரு தீனா மற்றும் மற்றொருவருடன் சேர்ந்து மூன்று பேராக பைக்கில் ஹாயாக சென்றுள்ளார். இந்த  வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.


Advertisement