அட.. அவரா இது! நடிகர் கருணாஷின் மனைவி கிரேஸ் இளம்வயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!

அட.. அவரா இது! நடிகர் கருணாஷின் மனைவி கிரேஸ் இளம்வயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!



grace-young-age-photo-viral

தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் கருணாஸ். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும் அவர் அரசியலிலும் களமிறங்கி பிஸியாக உள்ளார்

இவரது மனைவி கிரேஸ். நாட்டுபுற பாடகியான இவர் சினிமாவில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் கிரேஸ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்துள்ளார். இவர் மிகவும் கலகலப்பாக இருக்க கூடியவர். நிகழ்ச்சிகளில் இவரது உடல் எடையை வைத்து யார் கிண்டல் செய்தாலும் அதனை கிரேஸ் மிகவும் ஜாலியாக எடுத்துக் கொள்வார்.

இந்நிலையில் நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸின் இளவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று பிறந்த நாள் கொண்டாடிய கிரேஸ்க்கு வாழ்த்துக் கூறி நடிகர் கருணாஸ் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் கிரேஸா இது! செம ஸ்லிம்மாக க்யூட்டாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.