ஆஹான்.. சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு என்ஜாய் செய்த ஜி.பி.முத்து.. பிக்பாஸை விட்டுசென்ற சங்கதி இதுதானா?..!!

ஆஹான்.. சன்னிலியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு என்ஜாய் செய்த ஜி.பி.முத்து.. பிக்பாஸை விட்டுசென்ற சங்கதி இதுதானா?..!!


gpmuthu feeding palkova to sunny leone

 

நடிகை சன்னி லியோன், சதீஷ், யோகேஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து உட்பட பலர் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவானது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்கு நடிகை சன்னி லியோனும் வந்திருந்தார்.

இப்படம் ஹாரர், காமெடி கலந்து உருவாகியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை அடுத்தடுத்து ஈர்த்துள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது நடிகை சன்னி லியோன், ஜி.பி.முத்துவுடன் பேசி ரசிகர்களை மகிழ்வித்து இருந்தார். 

actor sunny leone

இது ஜி.பி.முத்துவுக்கு முதல் படம், அதுவும் சன்னி லியோனுடன் அமைந்துள்ள நிலையில், அதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து சன்னிலியோனும், ஜி.பி.முத்துவும் உரையாடிய பின்னர் இருவரும் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும்,  தமிழகத்திற்கு வருகை தந்த சன்னிலியோனுக்கு ஜி.பி.முத்து பால்கோவா ஊட்டிவிட்டார்.