கௌதம் கார்த்திக்கு விரைவில் பிப்பிப்பி., டும்டும்டும்.. அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

கௌதம் கார்த்திக்கு விரைவில் பிப்பிப்பி., டும்டும்டும்.. அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!


Gowtham Karthick Getting marriage Soon

தமிழ் திரையுலகில் 80sகளில் கொடிகட்டி பறந்த நவரச நாயகன் கார்த்திக். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வரிசையில் தான் இருக்கும். இவரின் மூத்த மகன் கௌதம் கார்த்திக். 

இவர் "கடல்" திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் படத்தை தொடர்ந்து, பிற படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு ஒரு வெற்றி வாய்ப்பை கொடுக்கவில்லை. 

gowtham karthik

தற்போது பத்து தலை, 1947 ஆகிய திரைப்படங்கள் கௌதமின் நடிப்பில் விரைவில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அண்மையில் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த நிலையில், ஒருவர் திருமணம் எப்போது? என்று கேட்டார்.

gowtham karthik

அதற்கு பதிலளித்த கௌதம் விரைவில் நடக்கும் என்று பதில் அளித்துள்ளார். இதனால் விரைவில் கௌதம் கார்த்திக்கு திருமணம் நடைபெறலாம் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.