போடு வெடிய... தல ரசிகர்களுக்கு குட் நியூஸ்... ட்விட்டர் வீடியோவில் சர்ப்ரைஸ் கொடுத்த மகிழ் திருமேனி.!good-news-for-ajith-fans-magil-thrumeni-posted-a-video

தல அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தல 62 திரைப்படத்தின் அப்டேட்க்காக அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். அந்தத் திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது .

பின்னர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி அந்த திரைப்படத்தின் இயக்குனராக அறிவிக்கப்பட்டார். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு படத்திற்கு விடாமுயற்சி என பெயர் சூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் தந்தை மரணம் அடைந்ததால் படப்பிடிப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

Kollywoodஜூன் மாதம் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் உலக சுற்றுப்பயணம் சென்று விட்டார். இதனால் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள் தவம் இருந்தனர். தற்போது அஜித் நார்வே மற்றும் துபாய் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திருப்பி இருக்கிறார் .

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி தனது ட்விட்டர் பக்கத்தில் வேதாளம் திரைப்படத்தில் வரும் விநாயகா பாடலை வைத்து விடாமுயற்சி அப்டேட் விரைவில் வரும் என தெரிவித்துள்ளார். இதனால் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.