சன் டிவி பிரபலம் இம்மான் அண்ணாச்சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? சோகத்தில் குடும்பம்!

சன் டிவி பிரபலம் இம்மான் அண்ணாச்சிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? சோகத்தில் குடும்பம்!


gold-and-money-theft-in-sun-tv-fame-imman-annachi-house

தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் இம்மான் அண்ணாச்சி. மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் சன் தொலைக்காட்சியில் தன்னை சேர்த்துக்கொண்ட இம்மான் அண்ணாச்சி சொல்லுங்கன்னே சொல்லுங்க என்ற நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.

டிவி நிகழ்ச்சிகளையும் தாண்டி பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடத்திலும் நடித்துள்ளார் அண்ணாச்சி.  சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டீஸ், அசத்தல் சுட்டிஸ், சீனியர் சுட்டீஸ் என பல்வேரு நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

Sun tv

இந்நிலையில் இன்று காலை இமான் அண்ணாச்சியின் அரும்பாக்கம் வீட்டில் அடையாளம் தெரியா கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். 41 சவரன் நகைகளும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும், வாட்ச் ஒன்றும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து இமான் அண்ணாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.