புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட.. நீயா நானா கோபிநாத்தின் மகளா இது! நல்லா வளர்ந்து எப்படியிருக்காரு பாத்தீங்களா!!!
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மற்றும் ஆர்வமூட்டும் தலைப்பில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து ஏராளமான ரசிகர் பட்டாளங்களை பெற்றவர் கோபிநாத்.
இதில் அவரது ஆழமான கருத்து தெளிவான உச்சரிப்பு மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் போன்றவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. கோபிநாத் கடந்த 2010ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வெண்பா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் சார்பில் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அவரது மகளே அவருக்கு வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை கண்ட ரசிகர்கள் கோபிநாத்தின் மகளா இது! நன்கு வளர்ந்து விட்டாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.