கர்ஜனையான பிக்பாஸ் வாய்ஸ்க்கு சொந்தக்காரர் இவர்தானா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி பிரபலம்!!

கர்ஜனையான பிக்பாஸ் வாய்ஸ்க்கு சொந்தக்காரர் இவர்தானா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி பிரபலம்!!


gobi-nair-interview

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

bigbossஇவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது விஜய்டிவியில் நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுக்கும் கோபி நாயர், பிக்பாஸ் குறித்து இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அப்பொழுது அவரிடம் பிக்பாஸ் குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அவர் வனிதா முதலில் இருந்ததை விட இரண்டாவது தடவை வீட்டிற்குள் நுழைந்தபோது நிறைய கற்றுக் கொண்டார் எனவும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் கவின் அவராகவே இருப்பது நல்லது, அவரது தவறுகளை தெரிந்து கொண்டு அவர் தீர்த்துக் கொள்ள வேண்டும். காதல் என்பது புனிதமான ஒன்று.அதனை விமர்சனம் செய்யும் வகையில் கவின் செய்யும் செயல்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது.

வெளிநாட்டில் இருந்து தனியாக வந்து மிகவும் தைரியமாக லாஸ்லியா விளையாடி வருகிறார். அவர் பெரியவர்களுக்கு சற்று மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார.  மேலும் தர்சன் மிக வலிமையான போட்டியாளர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

bigboss

இந்நிலையில் அவரிடம் பிக்பாஸ் வாய்ஸ் உங்களுடையதுதானா என கேள்வி எழுப்பிய நிலையில் அவர் சத்தியமாக இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ்க்கு குரல் கொடுப்பவர் யார் என்பது எனக்கும் தெரியாது. மேலும் அவரது உருவம் தெரிந்துவிட்டால் கர்ஜனையான இந்த குரல் ஒரு சாதாரண மனிதனின் குரலாக மாறிவிடும். ஆனால் கடந்த இருசீசன் களை விட இந்த சீசனில் பிக்பாஸ் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் குரல் கேட்டாலே முதல் இரு சீசன்களின்  போட்டியாளர்கள் அலறுவர். ஆனால் தற்பொழுது அப்படி நடப்பது போன்று தெரியவில்லை இனி வரும் நாட்களில்  பிக்பாஸ் குரல் உயர வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார்.