தமிழகம் காதல் – உறவுகள்

காதலனை சந்திக்க கடல் கடந்துவந்த இளம்பெண்ணுக்கு ஹோட்டல் அறையில் நேர்ந்த விபரீதம்! கதறிய காதலன்!!

Summary:

girl commits suicide in hotel room

இலங்கையை சேர்ந்த செல்வராஜ் என்பவரது 22 வயது மகள் மலர் மேரி. காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அவினாஷ். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக நட்புடன் பழகி வந்துள்ளனர். மேலும் இவர்களது நட்பு நாளடைவில் உலக மாறியது. இதனை தொடர்ந்து 7 மாதங்களாக அவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவினாஷை சந்திக்க விரும்பிய மலர் மேரி இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார். இதையடுத்து சென்னை வந்த மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்துள்ளார். 

love க்கான பட முடிவுபின்னர் இருவரும் ஜோடியாக  சென்னையின் பல இடங்களை சுற்றிப்பார்த்துள்ளனர். இதையடுத்து தன் காதலி மலர்மேரியை கடந்த 25ம் தேதி இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவினாஷ் முடிவு செய்தார். 

ஆனால் மலர்மேரி அவினாஷை விட்டு பிரிந்து செல்ல மறுத்துவிட்டாராம். இதையடுத்து காதலியை லாட்ஜிலேயே தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலையில் அவினாஷ் வேலைக்கு சென்றுள்ளார்.

suicide க்கான பட முடிவு

இந்நிலையில் விடுதி ஊழியர்கள் மலர்மேரி தங்கியிருந்த அறையின் கதவை வெகுநேரம் தட்டிப்பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மலர்மேரி தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவலளிக்கபட்டு அங்கு விரைந்த  மலர்மேரியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

 இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து காதலன் அவினாசிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


Advertisement