கில்லி பட காட்சிக்கு இப்படி ஒரு டப்பிங்கா.. கலவர காட்சியை காமெடி ஆக்கிய ரசிகர்..!

கில்லி பட காட்சிக்கு இப்படி ஒரு டப்பிங்கா.. கலவர காட்சியை காமெடி ஆக்கிய ரசிகர்..!



Gilli movie scene dubbed by fan

2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கில்லி. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் முக்கிய திருப்புமுனையாகவும் இருந்தது.

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வரும் காட்சிகளை இன்றும் ரசிகர்கள் பெரிதும் ரசித்து பார்க்கின்றனர். இந்தப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் மனதில் நிலைத்து நிற்கும்படி இயக்குனர் தரணி காட்சிபடுத்தியிருப்பார்‌.

Gilli

இந்த படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிய நிலையிலும் இந்த படத்தின் காட்சி ஒன்றினை ரசிகர் ஒருவர் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சியில் பிரகாஷ்ராஜ், விஜய் மற்றும் த்ரிஷா பேசும் வசனங்களை அந்த ரசிகர் டப்பிங் செய்துள்ளார். 

இதில் சற்று வித்தியாசமாக இருக்கும் த்ரிஷாவின் குரல் மற்ற இணையவாசிகளையும் பெரிதாக கவர்ந்துள்ளது. இதோ இந்த வீடியோவை பார்த்து நீங்களும் உங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாய் இருங்கள்.