திடீரென அரசியலில் இருந்து விலகிய காயத்திரி ரகுராம்! என்ன காரணம் தெரியுமா?

gayathri raguram relieved from politics


gayathri raguram relieved from politics


தமிழ் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் ரகுராம். இவரது மகள்தான் பிக் பாஸ் காயத்ரி. காயத்ரி ஒருசில படங்களில் கதாநாயகியான நடித்துள்ளார். மேலும், பல்வேறு படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்ட விதம், இவர் பேசிய வார்த்தைகள் என மக்கள் மத்தியில் பயங்கர வெறுப்பை சம்பாதித்தார் காயத்ரி. அந்த நிகழ்ச்சியின்போது அவரது செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. காயத்ரி ரகுராம் பா.ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களை காயத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தான் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து காயத்ரி அவரது டுவிட்டர் பதிவில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் ‘வெறும் வாக்குவாதமும், மற்றவர்களைக் குற்றம் சொல்வதுமாக அரசியல் இன்று மிகவும் தரம் தாழ்ந்து விட்டது. குழந்தைகள் சண்டை போல உள்ளது. வழிநடத்த முதிர்ச்சியான தலைவர்கள் இல்லை. உருப்படியாக எதுவும் நடப்பதில்லை. மக்கள் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது.

நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா? எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது. நமக்காக நான் வருத்தப்படுகிறேன். முடிவில் நாம் நகைச்சுவை பொருளாகிவிடுகிறோம். இது எனது தனிப்பட்ட கருத்து. 

சினிமாவைவிட, அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கின்றனர். போலியான போராளிகள், போலித் தலைவர்கள், போலித் தொண்டர்கள், போலி உறுப்பினர்கள். இதுதான் கடைசியில் கிடைக்க பெறுகிறோம். என்னால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க முடியாது. நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்புடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன். 

இந்த பதிவை தொடர்ந்து காயத்ரி பா.ஜனதாவில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இவற்றை மறுத்து இருக்கிறார். இதற்காக மீண்டும் ஒரு பதிவில் ‘நான் அரசியலில் சிறிது இடைவெளி எடுக்க இருப்பதாகத் தான் தெரிவித்துள்ளேன். நான் குறிப்பிட்டது பா.ஜனதா கட்சியை அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.