உங்களை கண்டாலே நடிகைகள் ஓடுறாங்க.. நடிகர் விஷால் மீது பகீர் குற்றச்சாட்டு! பிரபல நடிகை கூறியதை பார்த்தீர்களா!!

உங்களை கண்டாலே நடிகைகள் ஓடுறாங்க.. நடிகர் விஷால் மீது பகீர் குற்றச்சாட்டு! பிரபல நடிகை கூறியதை பார்த்தீர்களா!!


gayathri raguram complaint on vishal

சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த பள்ளியை மூட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் இதுவரை பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்களுக்கு மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலை கண்டிக்க வேண்டும். சினிமாவில் புதிதாக நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என பாருங்கள். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படும் மூத்த பெண் நடிகர்களை பாருங்கள்.

நீங்களும் உங்க நண்பர்களும் அந்த இடத்தில் இருந்துதான் வந்துள்ளீர்கள். பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள். உங்களால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமா துறையில் உதவித்தேவைப்படும் பெண்களுக்குத் துணையாக உங்கள் வீரத்தை காண்பித்திருக்க வேண்டும். ஆனால் நடப்பது வேறு. உங்களை கண்டாலே பெண் மூத்த நடிகைகள் ஓடுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.