என்னது.. இவரா.! தளபதி 67 படத்தில் வில்லனாகிறாரா இந்த பிரபல இயக்குனர்! வெளிவந்த சூப்பர் தகவல்!!

என்னது.. இவரா.! தளபதி 67 படத்தில் வில்லனாகிறாரா இந்த பிரபல இயக்குனர்! வெளிவந்த சூப்பர் தகவல்!!


Gawtham menan may act as villain in thalapathy 67 movie

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். தளபதியின் 66வது படமான இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சம்யுக்தா, பிரபு, குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார்.

Gautham menon

இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.