கருடன் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு? கடலூரில் அதிர்ச்சி.. கோட்டாட்சியர் அசத்தல் செயல்.!garudan-movie-new-cinemas-movie-issue

 

வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன் (Karudan). இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்துள்ளனர்.

மே 31ம் தேதியான நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் உள்ள நியூ சினிமாஸ் திரையரங்கில் நரிக்குறவர் மக்கள் தங்களின் குடும்பத்துடன் படம் பார்க்க சென்றுள்ளனர். 

இதையும் படிங்க: அனல்பறக்கும் வைப்.. சூரியின் கருடன் பட 'ஒத்தப்பட வெறியாட்டம்' பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!

அனுமதி மறுப்பும் - கோட்டாட்சியரின் செயலும்

அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த திரையரங்கம் தொடர்ந்து தட்டிக்கழித்து இருக்கிறது. இதனையடுத்து, அவர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் கேட்டபோது உரிய பதில் இல்லை. இதனால் அங்கு படம் பார்க்க வந்தவர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு உண்டானது. 

மேலும், கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நேரில் வந்த கோட்டாட்சியர் விசாரணை செய்து தனது செலவில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து அனைவரையும் படம் பார்க்க அனுப்பி வைத்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த நரிக்குறவர் மக்கள் மகிழ்ச்சியுடன் படம் பார்த்தனர். 

வீடியோ நன்றிபாலிமர் தொலைக்காட்சி

 

இதையும் படிங்க: அனல்பறக்கும் வைப்.. சூரியின் கருடன் பட 'ஒத்தப்பட வெறியாட்டம்' பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!