விருது விழாவில் காதல் கணவரை மறந்த சுந்தரி.! பின் அவர் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா!!

விருது விழாவில் காதல் கணவரை மறந்த சுந்தரி.! பின் அவர் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா!!


gaprilla-forget-to-speak-about-husband-in-award-functio

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து அவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் டிக் டாக் செயலியில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே மேலும் பரிச்சயமானார்.

பின்னர் வெள்ளித்திரையிலும் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில்  வெளிவந்த ஐரா படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் பல திரைப்படங்களில் சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் சுந்தரி தொடரில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற சன் குடும்ப விருது விழாவில் கேப்ரில்லாவிற்கு ஃபேவரட் ஹீரோயின் பிரிவில் விருது வழங்கப்பட்டது. அப்பொழுது மேடையில் பேசிய அவர் அவரது அம்மா மற்றும் அம்மாச்சி குறித்து உணர்ச்சி பொங்க பேசியிருந்தார். ஆனால் அவரது கணவரை குறித்து எதுவும் பேசவில்லை.

Gaprilla

இந்த நிலையில் கேப்ரில்லா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஸ்டேஜ்ல ஒரு பதட்டத்தில் உன் பெயரை சொல்ல மறந்துவிட்டேன் என கணவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு அவரும் உண்மையாவே அம்மா, அம்மாச்சியைதானே சொல்லணும். உண்மையை மட்டும் சொல்லு பாப்பா போதுமென கூறியுள்ளார். அதற்கு கேப்ரில்லா நீதான் என் வாழ்நாள் விருது என்று பதிவு செய்துள்ளார். அது வைரலாகி வருகிறது.