சினிமா

அடேங்கப்பா.. வேற லெவல் டான்ஸா இருக்கே! செம க்யூட்டாக பிக்பாஸ் கேபி வெளியிட்ட வீடியோ! தெறிக்கும் லைக்ஸ்கள்!!

Summary:

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக, குழந்தை நட்சத்திர

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக, குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் துணை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கேப்ரில்லா சிறுவயதிலேயே விஜய் தொலைக்காட்சியில் நடன ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.  

அதனைத் தொடர்ந்து அவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பரிச்சயமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவர் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டார். தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாடகர் ஆஜித்துடன் இணைந்து போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் அசத்தலான நடன திறமை கொண்ட கேப்ரியலா குக்கூ குக்கூ பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது பெருமளவில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement