அட.. வேற லெவலில் கலக்குறியேமா! செம ஹேப்பியில் கேப்ரில்லா! குவியும் வாழ்த்துக்கள்!! என்ன விசேஷம் தெரியுமா??

அட.. வேற லெவலில் கலக்குறியேமா! செம ஹேப்பியில் கேப்ரில்லா! குவியும் வாழ்த்துக்கள்!! என்ன விசேஷம் தெரியுமா??


gaprilla-buy-a-car-photo-viral

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஹீரோயினான ஸ்ருதிஹாசனின் தங்கையாக, குழந்தை நட்சத்திரமாக நடித்து  பிரபலமானவர் கேப்ரில்லா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் சிறுவயதிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு  அனைவர் மத்தியிலும் பிரபலமானார்.

பின்னர் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு 5 லட்சம் பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து கேப்ரில்லா சிங்கிள் பசங்க, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே 2வில் முன்னணி கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கேப்ரில்லா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளப் பக்கத்தில், பல மாத யோசனைக்கு பின், புதிய காரை வாங்க நான் முடிவு செய்துள்ளேன். நான் டாடா ஹேரியர் டார்க் எடிசன் காரை முதல் காராக தேர்வு செய்து வாங்கியுள்ளேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  இது உங்களது அனைவரின் அன்பாலும் ஆதரவாலும்தான் சாத்தியமானது. இந்த பீஸ்ட் என்னைக் காக்க வந்திருக்கிறது. லவ் யூ ஆல் என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.