அரசியல் சினிமா

மீண்டும் மோடி ஆட்சி தான் வரவேண்டும்.. மோடியை புகழ்ந்து பேசும் பிரபல நடிகை

Summary:

ganganaranavath about the narendra modi

நடிகை கங்கனா ரணட்  இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய 'தாம் தூம்' திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

Image result for kangana ranaut

இவர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து, தொடர்ந்து இரண்டு வருடம், தேசிய விருதை பெற்று தனக்கென தனி அங்கீகாரத்தை பிடித்து வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் 'சலோ ஜேட்டீ ஹெய்ன்' என்ற குறும்படம் மும்பையில் நேற்று திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட நடிகை கங்கனா, விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Image result for சலோ ஜேட்டீ ஹெய்ன்

அப்போது, இவரிடம் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கங்கனா "பிரதமராக இருப்பதற்கு தகுதிவாய்ந்தவர் நரேந்திர மோடி தான் என்றும், ஜனநாயகத்தின் சரியான தலைவர் என்ற அடிப்படையில், மோடி தான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம்" என தெரிவித்துள்ளார்.


Advertisement