சினிமா

பிக்பாஸ்க்கு போட்டியாக பிரபல தமிழ் தொலைக்காட்சி வழங்கும் புது நிகழ்ச்சி! என்ன தெரியுமா?

Summary:

Ganesh venkatraman hosting new show in jaya tv with 12 girls

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு சீசனாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றியும் பெற்றது.

தற்போது மீண்டும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்க 15 போட்டியாளர்களுடன் விரைவில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க உள்ளது. இந்நிலையில் சீசன் 3 இல் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 தொடங்க இருக்கும் வேளையில் பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜெயா தொலைக்காட்சியில் 12 பெண்களை மையப்படுத்தி ஆக்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

12 பெண்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் பிக் பாஸ் 1 போட்டியாளரும், பிரபல நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் வழிநடத்தவுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்றை கணேஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


Advertisement