சினிமா

அஜித்துக்கு இருப்பது ரசிகர்களே இல்லை- பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!

Summary:

Ganavel raja open talk

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். இவர் மிகவும் எளிமையான மனிதரும் கூட. மேலும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் கொண்டாடப்படும் ரசிகராகவும் விளங்குகின்றார். 

அஜித் படத்தையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேட்டி கொடுக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

 

அதாவது ரசிகர்களுக்கு அஜித் மேல் உள்ள பாசத்தை நான் எங்கேயும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர், அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது, வெறியர்கள் என்று கூறியுள்ளார். 

ஆனால் ஒரு நடிகர் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்கவில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள். ஆனால் இவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக பேசியுள்ளார்.


Advertisement