பிக்பாஸ் வனிதா வீட்டில் ரகசியமாக நடைபெற்ற விழா!! யார் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!

பிக்பாஸ் வனிதா வீட்டில் ரகசியமாக நடைபெற்ற விழா!! யார் யாரெல்லாம் கலந்து கொண்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!


Function celebrated for vanitha daughter secretly

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.மேலும் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்றார். நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தையும் லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். 

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 துவக்கத்திலிருந்து நிகழ்ச்சிக்கு பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியவர் வனிதா. எப்பொழுதும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தானாக தலையிட்டு பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதுமே கத்திக்கொண்டே இருப்பார். மேலும் ஒருவருக்கொருவர் சண்டையையும் ஏற்படுத்திய நிலையில் அவருக்கு வத்திகுச்சி என்ற பெயரும் உள்ளது.அதனால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் மோசமான விமர்சனங்களை பெற்றார். 

Bigg boss இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சந்தித்து நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் வனிதாவின் மகளுக்கு சமீபத்தில் ரகசியமாக விழா நடைபெற்றுள்ளது. அதில் பாத்திமா,  லாஸ்லியா,  சேரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.