சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வரலாற்றிலையே இதுதான் முதல் முறை! இதனை கவனித்தீர்களா?

Summary:

First time in bigg boss tamil history

கடந்த 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.

இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் சீசன் மூன்று பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் கைப்பற்றினர்.

இதில், இறுதி சுற்றுக்கு முன்னதாக முகேன் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு தேர்வானார். இதற்கு முன் சீசன் ஒன்றில் ஸ்நேகனும், சீசன் இரண்டில் ஜனனியும் கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி இறுதி வாரத்திற்கு தேர்வானார்கள். ஆனால், இவர்கள் இருவருமே பட்டத்தை கைப்பற்றவில்லை.

ஆனால், இந்த முறை கோல்டன் டிக்கெட்டையும் கைப்பற்றி பிக்பாஸ் பட்டத்தையும் கைப்பற்றி முதல் முறையாக சாதனை படைத்துள்ளார் முகேன் ராவ்.


Advertisement