தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் இறுதி பட்டியல்! வெல்லப்போவது யார்?final-movie-list-for-deepavali-2018-sarkar-vs-billa-pan

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் படங்கள் வெளியாகும். ஆனால் தற்போது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஆனால் ஏதாவது ஒரு திரைப்படம் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றுவரை ஏதவது பண்டிகைநாள் பார்த்துதான் திரையிடுகிறார்கள்.

இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கும் தல அஜித்தின் விஸ்வாசம், தளபதி விஜய்யின் சர்கார், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் ரிலீஸாக இருந்தன. ஆனால் விஸ்வாசமும், NGK வும் படப்பிடிப்புகள் முடிவடையாததால் தனியாக சர்கார் படம் மட்டுமே தனி ஒரு படமாக திரைக்கு வருவதாக இருந்தது.

Deepavali 2018

ஆனால் சர்க்கார் படத்திற்கு போட்டியாக கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடுச்சவன் திரைப்படமும் வெளியாகும் என செய்திகள் வந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் தீபாவளி ரேஸில் இருந்து தனுஷின்  என்னை நோக்கி பாயும் தோட்டா படமும், விஜய் ஆண்டனியின் திருமிரு புடுச்சவன் படமும் விளக்கியுள்ளது.

Deepavali 2018

இந்நிலையில் சர்க்காருக்கு போட்டியாக பில்லா பாண்டி திரைப்படம் வெளியாக்குகிறது. எனவே சர்க்கார் மற்றும் பில்லா பாண்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் இறுதி பட்டியல் ஆகும்.