நான்கு வருட பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது... வைரலாகும் பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் போட்டோ!!

நான்கு வருட பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது... வைரலாகும் பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் போட்டோ!!Final click of Bharathi kannama photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்ற நெடுந்தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடர் 4 வருடங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், 1000 எபிசோடுகளை கடந்துள்ளது. அரைத்த மாவையே அரைப்பது போல் ஒரே கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் பாரதி கண்ணம்மாவை எப்போது முடிப்பீர்கள் என்று ரசிகர்கள் வெறுக்கும் வரை ஆகிவிட்டது.

இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது போலவும் அதற்கு மற்ற சீரியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துவது போலவும் காட்சி வெளியாகியுள்ளது. இன்றைய எபிசோடின் இறுதியில் மொத்த குடும்பமும் ஒன்று சேர்ந்துவிட்டு நிலையில் சுபம் என்று சீரியலை முடித்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மாடியோ ஒரு வழியா பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்து விட்டது என மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பாரதி கண்ணம்மா 2ம் சீசன் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் ப்ரோமோவும் இன்றைய எபிசோடில் வர இருக்கிறது. 

bharathi kannama