சூர்யாவிற்காக மாஸ்டரிடம் கெஞ்சிய இயக்குனர் பாலா.. என்ன காரணம் தெரியுமா.?

சூர்யாவிற்காக மாஸ்டரிடம் கெஞ்சிய இயக்குனர் பாலா.. என்ன காரணம் தெரியுமா.?


Fight master viral interview about surya and bala

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவரது திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் தனது நடிப்புத் திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றியடைந்து வருகிறார் சூர்யா.

bala

இது போன்ற நிலையில், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த 'நந்தா' திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பிதாமகன், மாயாவி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.

மேலும் தற்போது 'நந்தா' திரைப்படத்தின் சூர்யா நடித்த கதையையும், அவருக்காக ஃபைட் மாஸ்டரிடம் இயக்குனர் பாலா கெஞ்சியதையும் ஸ்டண்ட் மாஸ்டர் சிவா என்பவர் பேட்டியில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, " நந்தா திரைப்படத்தில் மூலமாக சூர்யாவை ஆக்சன் ஹீரோவாக மாற்றியே ஆக வேண்டும் என்று பாலா கூறிக் கொண்டே இருந்தார்.

bala

மேலும் என்னிடம் வந்து சூர்யாவை எப்படியாவது ஆக்சன் ஹீரோவாக மாற்ற வேண்டும் என்று கெஞ்சினார். சூர்யாவின் தோற்றத்தை பார்த்து முதலில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் அவர் சண்டை லாட்சிகளில் நடிக்க ஆரம்பிக்கும் போது பிரம்பிப்பாக இருந்தது" என்று ஸ்டண்ட் மாஸ்டர் சிவா சமீபத்திய பேட்டியில் பாலா மற்றும் சூர்யாவை குறித்து பேசியிருக்கிறார்.