படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்க பைட் கிளப் படக்குழு சர்ப்ரைஸ் செயல்; இனி எல்லாம் அதிரடிதான்.!Fight Club Movie Trimmed Version Now Screen on theatres

 

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் உருவான திரைப்படம் பைட் கிளப்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், 15ம் தேதி திரைக்கு வந்தது. 

இந்நிலையில், படத்தின் விறுவிறுப்பை பார்வையாளர்களுக்கு அதிகரிக்க, படக்குழு படத்தின் நீளத்தை குறைத்து இருக்கிறது. இன்று முதல் பைட் கிளப் திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்ட திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் படம் அடியெடுத்து வைத்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் வாரத்தில் ரூ.6 கோடியை கடந்து படம் வசூல் செய்திருந்தது. தற்போது இரண்டாவது வாரத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும், அதனைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.