பைட் கிளப் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம்: படக்குழு மகிழ்ச்சி.!FIght Club Movie Team Success Celebration 


அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் உருவான திரைப்படம் பைட் கிளப்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், 15ம் தேதி திரைக்கு வந்தது. 

fight club

இந்நிலையில், படத்தின் விறுவிறுப்பை பார்வையாளர்களுக்கு அதிகரிக்க, படக்குழு படத்தின் நீளத்தை குறைத்து இருக்கிறது. 

இந்நிலையில், படத்தின் வெற்றி விழாவை படக்குழு இன்று கொண்டாடியது. Smashing Hit என்ற தலைப்பில், படக்குழு கேக் வெட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தது. அதுகுறித்த புகைப்படங்களை வெளியாகி வைரலாகி வருகின்றன.