விஜயகுமாரின் பைட் கிளப் படம் விரைவில் தொலைக்காட்சியில்.. ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஹாட்ஸ்டார்.!Fight Club Movie OTT & Television Rights 


இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், வரும் 15ம் தேதி திரையில் வெளியாகிறது.

அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் படம் தயாராகியுள்ளது.

tamil cinema

படத்தின் ராவண கூட்டம் என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு தணிக்கைக்குழு A சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 

இந்நிலையில், பைட் க்ளப் திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகளை விஜய் தொலைக்காட்சியும் கைப்பற்றி இருக்கிறது. இதனால் படம் திரையரங்கில் வெளியான பின்னர் விரைவில் ஹாட்ஸ்டார் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.