பெண் குழந்தைகள் சாமிக்கு சமம், அவர்களை போய்...ச்சீ. கண்ணீர் வடித்த பிரபல நடிகர்.!
சிலநாட்களுக்கு முன்பு சென்னையில் 12 வயது சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை சம்பவம் பல தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு பலரும் தங்களது கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திரையுலகினரும் இதற்கு தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் தமிழ் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி அளித்த பேட்டியில்,
“இதுபோன்ற சம்பவங்கள் பெண்ணுக்கு நடந்தாலே தாங்க முடியாது, குழந்தை அது. என்ன சொல்றதுன்னு தெரியலை..கொடூரமா கொலை பண்ணாலுமே பத்தாதுனு தோணுது. தண்டனை வலுவாக இருக்க வேண்டும், பயமுறுத்த வேண்டும்.
பெண்கள்தான் இந்தப் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்களால்தான் பூமி பெரிதாகிறது; வளர்கிறது. வாழ்க்கையை அவர்கள்தான் பிடித்து இழுக்கிறார்கள்.
வாழ்க்கையை வாழச் சொல்லித் தருவதும், அழகாக்குவதும் பெண்கள்தான். பெண் இல்லாமல் எதுவும் இல்லை. பெண் குழந்தை சாமிக்குச் சமம்.
அவர்களை வன்புறுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனையை காலம் தாழ்த்தாமல் கொடுக்கவேண்டும் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.