நடிகை பாத்திமாவிடம் வம்பு இழுத்த ரசிகர்.? பாத்திமா கொடுத்த பதிலடியால் வாயடைத்து போன நெட்டிசன்கள்.!

நடிகை பாத்திமாவிடம் வம்பு இழுத்த ரசிகர்.? பாத்திமா கொடுத்த பதிலடியால் வாயடைத்து போன நெட்டிசன்கள்.!



Fathima babu reply to social media user

பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமா பாபு. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்து முக்கிய நடிகையாக மக்களால் அறியப்படுகிறார். இவரின் செய்தி வாசிப்பிற்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

பாத்திமா பாபு

வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பாத்திமா பாபு, சில ஆண்டுகளாக வெள்ளித்திரையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். இதன் பின்பு சின்ன திரையில் நாடகங்களில் நடிக்க தொடங்கினார் பாத்திமா பாபு.

இதன்படி பாத்திமா பாபு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. இதன்பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சில தினங்களிலேயே வெளியானார்.

பாத்திமா பாபு

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாகவே இருக்கும் பாத்திமா பாபு, அடிக்கடி பேஸ்புக் பக்கத்தில் பல பதிவுகளை பதிந்திருக்கிறார். இவ்வாறு சமீபத்தில் இவர் பதிவிட்டுள்ள பதிவில் இணையதளவாசி ஒருவர் உங்கள் பிள்ளைகளுக்கு இந்து பெயர் வைக்காததற்கு காரணம் என்ன உங்கள் கணவரும் இந்து தானே என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். அந்த கேள்விக்கு பாத்திமா பாபு பொத்திட்டு போ என்று கோபமாக பதிலளித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.