ப்ளீஸ்.. இதை செய்யுங்க! பிக்பாஸ் பாத்திமா பாபுவிற்கு திடீர் அறுவை சிகிச்சை! ஏன்? என்னாச்சு! வைரலாகும் வீடியோ!!

ப்ளீஸ்.. இதை செய்யுங்க! பிக்பாஸ் பாத்திமா பாபுவிற்கு திடீர் அறுவை சிகிச்சை! ஏன்? என்னாச்சு! வைரலாகும் வீடியோ!!


fathima babu got surgery for kidney stone

செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பாத்திமாபாபு. தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் அனைவரையும் கவர்ந்த அவர் சில திரைப்படங்களிலும்,தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

இதற்கிடையில் பாத்திமா பாபு அவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமான அவர் தற்போது விஜய் டிவியில் மோகன் வைத்யாவுடன் இணைந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரக கற்களுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

Fathima babuஇதுகுறித்து கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த வாரம் திடீரென கீழ்முதுகில் அதிக  வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது கிட்னியில் பெரிய கல் இருக்கிறது என கூறினர். பின் அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது நான் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். நான் ஷூட்டிங் செல்லும் இடங்களில் கழிவறை வசதி அரை கிலோமீட்டர் தள்ளி இருக்கும். அதனால் அடக்கி வைத்து, வைத்துதான் இப்படி கல் உருவாகியிருக்கிறது என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.