"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
ஆசை ஆசையாக சிக்கன் சாப்பிட்ட தந்தை, 4 வயது மகள்.! அடுத்தடுத்ததாக நேர்ந்த அசம்பாவிதம்.! என்னதான் நடந்தது??
மதுரை மாவட்டம் பெரியபொக்கம்பட்டியை சேர்ந்தவர் 33 வயது நிறைந்த கவுதம் ஆனந்த். இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு மிதுஸ்ரீ என்ற நான்கு வயது மகள் இருந்தார். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கடையில் கோழிக்கறி வாங்கிவந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறிது நேரத்திலேயே மிதுஸ்ரீக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் பதறிப்போன கவுதம், மகளை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே கவுதமிற்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் கவுதம் ஆனந்திற்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் பவித்ரா அளித்த புகாரின் பேரில், கோழிக்கறி சாப்பிட்டதால்தான் அவர்கள் உயிரிழந்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.