வாவ்!!சூப்பர் தகவல்...மீண்டும் சீரியலில் நடிக்க வந்த நடிகை ஃபரீனா... வைரலாகும் புகைப்படம்.!



farina-backto-bharthi-kannama-serial

விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் இந்த தொடரில் ஹீரோ பாரதியை ஒரு தலையாக காதலித்து அவரை அடைய பல வில்லத்தனங்களை செய்யும் கொடூர வில்லியாக, டாக்டர் வெண்பாவாக நடித்து மிரள வைத்து வருபவர் நடிகை ஃபரீனா. 

ஃபரீனா இதற்கு முன்பு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இந்த நிலையில் அவர் அண்மையில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் அவர் தொடரில் இருந்து விலகாமல் தொடர்ந்து நடித்து வந்தார்.


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஃபரீனாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்த சில காலங்கள் மட்டுமே ஆன நிலையில் மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்துள்ளார்.