அச்சோ! சீக்கிரம் முடிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலால் டென்ஷனான ரசிகர்! வில்லி வெண்பாவின் பதிலை பார்த்தீங்களா!!

அச்சோ! சீக்கிரம் முடிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலால் டென்ஷனான ரசிகர்! வில்லி வெண்பாவின் பதிலை பார்த்தீங்களா!!


farina-answer-to-fan-who-got-upset-by-bharathi-kannamma

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வந்த தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

850 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது விறுவிறுப்பு குறைந்து காணப்படுகிறது. மக்களுக்கு போரடிக்க துவங்கியுள்ளது. மேலும் பாரதிகண்ணம்மா தொடருக்கு எதிராக அதிருப்தியான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

farina

இந்த நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பாரதிகண்ணம்மா தொடரில் வில்லியாக, வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிடம், BK சீரியல் எப்போ முடியும். தயவுசெஞ்சு சீக்கிரமா முடிங்க, பாக்க முடியல என கூறியுள்ளார். அதற்கு பரீனா, "சரிங்க.. புரியுது. அந்த டிஎன்ஏ டெஸ்டை எடுத்துடுறோம்" என பதில் அளித்துள்ளார்.