BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! ரஜினிகாந்தின் தர்பார் குறித்து புதிய அப்டேட்
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார்.
மும்மையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தின.

இந்நிலையில் இன்று ஜூலை 25 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தர்பார் படத்தினை குறித்த புதிய அப்டேட் வெளியாகும் என இய்ககுநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#Darbar #update #July25th-6:00pm
— A.R.Murugadoss (@ARMurugadoss) July 25, 2019