மேடையில் பாடி கொண்டிருந்த அனிருத் மீது பொருட்களை வீசிய ரசிகர்கள்.! அவரோட ரியாக்ஷனை பார்த்தீங்களா!!fans-throw-things-on-anirudh-while-singing-on-stage

தமிழ் திரையுலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம்  இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் அனிருத் ரவிச்சந்திரன். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் உறவினர் ஆவார். 3 படத்தில் அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி செம ஹிட்டானது. 

இதைத் தொடர்ந்து அனிருத் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து தனது தனித்துவமான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்து தற்போது ராக் ஸ்டாராக வலம் வருகிறார். அவர் தற்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் போன்றவற்றிற்கு இசையமைத்து வருகிறார்.இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிசியாக உள்ளார். 

இந்நிலையில் அண்மையில் அனிருத் மேடைக் கச்சேரி ஒன்றில் பாடிக்கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ரசிகர்கள் சிலர் கீழே இருந்து வாட்டர் பாட்டில், பேப்பர் போன்ற சில பொருட்களை தூக்கி மேடை மீதும், அவர் மீதும் வீசியுள்ளனர். ஆனால் அதை கண்டு கோபமடையாத அனிருத் மிகவும் பொறுமையாக சிரித்து கொண்டே தொடர்ந்து பாடியுள்ளார். இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் அதனை கண்ட நெட்டிசன்கள் அனிருத் மிகவும் பொறுமையாக பாடியதற்கு வாழ்த்து கூறினாலும், ரசிகர்களின் அந்த செயலை தவறு என கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.