சினிமா

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் கூறுவது என்ன?

Summary:

Fans talk about Nerkonda parvai

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர்தற்போது சமூக அக்கறையோடு படம் நடிக்கிறார். ஏற்கனவே இவர் நடித்து வெளியான விசுவாஸம் தமிழக மக்களையே பேசவைத்தது. இந்தநிலையில் முக்கிய பிரச்சனையை பேசும் படமாக அவர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் நேர்கொண்ட பார்வை. 

அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் H.வினோத்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் இன்று வெளியானதை அடுத்து, தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் தல ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.

படத்தை பார்த்தவர்கள் சீக்கிரம் போய் குடும்பத்தோட "தல" படத்தை பாத்துருங்கப்பா...அதுவும் பொம்பள புல்லைகள பெத்தவுங்க தவராம பாருங்க... எனவும், பெண்கள் பார்க்க வேண்டிய படம்.... அதே போல் சில பெண்களை தவறாக எண்ணி சித்தரிக்கும் ஆண்கள் பார்க்கவேண்டிய படம். மொத்தத்தில் மிகவும் அருமையான படம் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement