சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சேரனுக்கு ரசிகர்கள் விடுத்த வேண்டுகோள்!! லாஸ்லியாவிற்கு இப்படியொரு நிலைமையா?

Summary:

fans request to cheran

பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் பிரபல இயக்குனர் சேரன். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். மேலும் இளைஞர்களுக்கு இணையாக தன்னால் முடிந்தவரை கடுமையாக போராடி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

bigg boss cheran elimination க்கான பட முடிவு

இந்நிலையில் சேரன் நேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தலை வணங்கி நிற்கிறேன். எனது 90 நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்து கொண்டு என்னை தாலாட்டி தட்டிக் கொடுத்து என் அன்பின் பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி. நேர்மை, நற்பண்பு, உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்கள் சிலரும் லாஸ்லியாவிற்கு எதிராகவும் சேரனிடம் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சேரனின் மிகப்பெரும் ரசிகர் ஒருவர் சேரப்பா ப்ளீஸ் அந்த ஃபேக் லாஸ்லியாவை நம்பாதீங்க. இது சேரன் சாரின் அனைத்து ரசிகர்களின் தாழ்மையான வேண்டுகோள். உங்களுடைய உண்மையான பாசத்திற்கு கொஞ்சமும் தகுதியில்லாதவர் லாஸ்லியா. அவளுடைய ஆதாயத்திற்காக அப்பா மகள் உறவை பயன்படுத்திக்கொண்டாள். நாங்கள் உங்களை எங்கள் இதயத்திலிருந்து நேசிக்கிறோம். சேரப்பா எங்களின் அப்பாவே பிக்பாஸில் விளையாடியதை போல் நாங்கள் உணர்ந்தோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Advertisement