அவர் இதைதான் எதிர்பார்த்தார்!! நடிகர் விவேக் மறைவு! அவரது கனவை நிறைவேற்றி ரசிகர்கள் செய்த காரியம்!!

அவர் இதைதான் எதிர்பார்த்தார்!! நடிகர் விவேக் மறைவு! அவரது கனவை நிறைவேற்றி ரசிகர்கள் செய்த காரியம்!!


fans-nurture-plants-for-give-respect-to-actor-vivek-dea

தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில்,  இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 எதிர்பாராத இந்த இறப்பிற்கு மக்கள் அனைவரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விவேக் இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவர் ஏராளமான மரங்களை நட்டு சாதனையும் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி அதனை செய்யுமாறு பலமுறை தனது ரசிகர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விவேக் உயிரிழந்த நாளான இன்று அவரது ஆசையை நிறைவேற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ரசிகர்கள் சிலர் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், விவேக் சார் அவர்களின் நினைவாக இன்று எனது கிராமத்தில் எனது நண்பர்களுடன் பல மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம். அவர் வளர்த்துள்ள கோடிக்கணக்கான மரங்களும் அவரின் நினைவாக நாங்கள் நட்டுள்ள பல மரக்கன்றுகளும் என்றும் அவர் புகழ் பாடும் என தெரிவித்துள்ளனர்.