சோகத்தில் இருந்த ரசிகர்களை குஷி படுத்திய நடிகை ராதிகா! புகழ்ந்து தள்ளும் ரசிகர் பட்டாளம்.!

சோகத்தில் இருந்த ரசிகர்களை குஷி படுத்திய நடிகை ராதிகா! புகழ்ந்து தள்ளும் ரசிகர் பட்டாளம்.!


Fans feeling happy for sithi serial

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் அதிகப்படியான  தட்டுப்பாடு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொரோனவால் சமூக விலகல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது.

 தொலைக்காட்சிகளில் தினமும் மக்களுக்கு கொடுப்பதற்கு புதிய நிகழ்ச்சிகளும் ,  போதுமான அளவு சீரியல்களும் இன்றி தவித்து வருகின்றனர் தொலைக்காட்சி நிறுவனங்கள். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக எந்தவிதமான படப்பிடிப்புகளும் நடை பெறவில்லை என்பதால் சீரியல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அந்த வகையில், பழைய சீரியல்களை எடுத்து மீண்டும் ஒளிபரப்ப தொடங்கி இருக்கிறார்கள் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள். கொரோனவால் வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள் பழைய விளையாட்டுகளான பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற பழைய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். 

rathika

 அந்தவகையில் தொலைக்காட்சி நிறுவனங்களும் பொதுமக்களை 10 வருடங்களுக்கு பின் அழைத்துச் சென்றுள்ளது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ராதிகா நடித்த சித்தி எனும் மெகா சீரியல் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணின்மணி... கண்ணின்மணி... எனும் பாடலைக் கேட்டாலே பொதுமக்களுக்கு பழைய ஞாபகங்கள் தானாக வந்துவிடும். 

 தற்போது சித்தி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாவதால் பொதுமக்கள் மிக மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா சரியான பிறகும் இந்த சீரியலை அப்படியே கடைபிடியுங்கள் என கிராம மக்கள் கூறுகின்றனர். என்னதான் புத்தம் புதிய தொடர்கள் வந்தாலும் சித்தி சீரியலுக்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இந்த சித்தி சீரியல் கிராம மக்களுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தார் போல் உள்ளது என கூறுகின்றனர் கிராமத்து சீரியல் ரசிகர்கள்.