விடாமுயற்சி எப்போ.?அஜித்தை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கடுப்பான அஜித்.?



Fans asking vidamuyarchi update

கடந்த சில மாதங்களுக்கு முன் ஏ கே 62 படத்தின் தலைப்பு "விடாமுயற்சி" என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, இப்போது வரை வேறு எந்த தகவலும் இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.

Ajith

இதையடுத்து, வழக்கம்போல அஜித் வெளிநாடுகளுக்கு பைக் டூர் சென்றுவிட்டார். தன் பைக்கில் நேபாளம், பூடான், நார்வே என்று சுற்றிக்கொண்டிருந்த அஜித், சில தினங்களுக்கு முன்பு துபாயில் வலம் வந்தார். 

இந்நிலையில்,நேற்று நள்ளிரவு சென்னை திரும்பிய அஜித்தை, அவரது ரசிகர்கள் 'விடாமுயற்சி' அப்டேட் கேட்டு சூழ்ந்துகொண்ட வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Ajith

இதனால் அஜித் கடும் கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது, அஜித் சென்னை திரும்பிவிட்டதால், இனி 'விடாமுயற்சி' படத்தின் பூஜை போடப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.