சினிமா

முகத்தை மூடியபடி பிரியங்கா சோப்ரா வெளியிட்ட புகைப்படம்.! கொந்தளித்த ரசிகர்.! எதனால் தெரியுமா?

Summary:

fan scold priyanga chopra

தமிழ் சினிமாவில் விஜயுடன் இணைந்து தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க நடிகரும், பாப் பாடகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் மிகவும் குறைந்தவர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது தனது கவர்ச்சி மற்றும் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அவர் புகைபிடிப்பது போன்று  வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

priyanka chopra க்கான பட முடிவு

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வைட் டைகர் என்ற படத்திற்காக டெல்லியில் படப்பிடிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் மாஸ்க் அணிந்து, என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. இங்கு இருப்பது மிகவும் கடினமாக உள்ளது. என காற்று மாசுபாடு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் ரசிகர் ஒருவர்,  அப்படியென்றால் நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள், இல்லையென்றால்  முதலில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துங்கள் என்று காட்டமாக பதிலளித்துள்ளார். 


Advertisement