பிரபல நடிகையின் ஹோட்டல் அறைக்குள் புகுந்த ரசிகர்! பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

பிரபல நடிகை ஒருவரின் ஹொட்டேல் ரூம் அறைக்குள் ரசிகர் ஒருவர் புகுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது, ரசிகர்களின் கருத்துக்களுக்கு பத்தி கூறுவது இதுபோன்ற சமயங்களில் ரசிகர்கள் மற்றும் நாயகிகளுக்கு இடையே சண்டை வருவது வழக்கம்.
ஆனால், இங்கே ஒரு ரசிகர் நாயகியின் ரூம் வரைக்கும் சென்றுள்ளார். சுஜித் இயக்கத்தில் பாகுபலி பட புகழ் பிரபாஸ் நடிக்க தயாராகி வரும் படம் சாஹோ. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இந்த படத்தில் ஈவ்ளின் ஷர்மா என்ற நாயகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஒரு காட்சி முடிந்ததும், ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார், அங்கு அவர் சற்றும்எதிர்பாராத வகையில் ரசிகர் ஒருவர் அவரது அறைக்குள் புகுந்துள்ளார். உடனே பயந்துபோன நடிகை ஈவ்ளின் ஷர்மா தனது மேனேஜரை அழைத்து அந்த ரசிகரை வெளியேற்றியுள்ளார்.
இதுபற்றி கூறிய நடிகை ஈவ்ளின் ஷர்மா ரசிகர்களை எனக்கு பிடிக்கும், அவர்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். ஆனால் இதுபோல் ஹோட்டல் அறையில் காத்துக் கொண்டிருப்பது எல்லாம் அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.