சினிமா

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை! இதுதான் காரணமாம்!

Summary:

Famous tamil actress riyamikka suicide

நாளுக்கு நாள் சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு என்னதான் காரணம் என்று விடை தெரிவதற்குள் இன்று மீண்டும் ஒரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 நடிகை ரியாமிகா. இவர் X-வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது இவரது வீடு. பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே சினிமாவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

ரியாமிகாவுக்கு தினேஷ் என்னும் காதலன் இருக்கிறார். நேற்று முன் தினம் வெளியே சென்ற ரியாமிகா தாமதமாக வந்துள்ளார். அதன் பிறகு காதலனுடன் மொபைலில் பேசி உள்ளார். அதன் பிறகு தூங்கச் செல்வதாக அறைக்குள் சென்றுள்ளார். அவரை சந்திக்க தினேஷ் காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் ரியாமிகா எழுந்திருக்கவில்லை.

வழக்கமாக ரியாமிகா காலையில் மெதுவாக எழும் பழக்கம் உள்ளவர் என்பதால் அவரை யாரும்  எழுப்பவில்லை. ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாயும்,அவரது தம்பியும் கதவை தட்டி உள்ளனர். பதில் ஏதும் வராததால் ஜன்னல் வழியே பார்த்த் போது ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement